நீதிமன்றத்திற்குள் வெடிகுண்டு கொண்டு வந்த விவகாரம்.. விசாரணை நடத்தப்பட்டதா?: காவல்துறைக்கு ஐகோர்ட் கேள்வி

சென்னை: சென்னை உயர் நீதிமன்ற வளாகத்திற்குள் வெடிகுண்டு கொண்டு வரப்பட்டது குறித்து விசாரணை நடத்தப்பட்டதா? என நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதானவர்களை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்ததை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் முக்கிய நபர் கைது செய்யப்படவில்லை. ஒவ்வொருவரும் ஒவ்வொரு திட்டத்துடன் இந்த சம்பவத்தில் ஈடுப்பட்டுள்ளனர் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், சம்பந்தப்பட்ட வாகனம் ஏற்கனவே பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறை பதில் அளித்துள்ளது. இறுதி விசாரணைக்காக வழக்குகள் ஜனவரி 27ம் தேதிக்கு தள்ளிவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

The post நீதிமன்றத்திற்குள் வெடிகுண்டு கொண்டு வந்த விவகாரம்.. விசாரணை நடத்தப்பட்டதா?: காவல்துறைக்கு ஐகோர்ட் கேள்வி appeared first on Dinakaran.

Related Stories: