மின்விளக்கு சாலையை மாற்றி தர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை பொதுமக்கள் வைக்கின்றனர். பூங்கா, இறகுப்பந்து கூடம், அம்மா உணவகத்தில் ஆய்வு மேற்கொண்டு அம்மா உணவகத்துக்கு கூடுதலாக என்ன தேவை இருக்கிறது என்பது குறித்து கேட்டறிந்தோம். ஒவ்வொரு வார்டிலும் பொதுமக்களின் குறைகளை கேட்டு அறிந்து நிவர்த்தி செய்து வருகிறோம். இவ்வாறு கூறினார். அமைச்சர் பி.கே.சேகர்பாபு கூறும்போது, ‘’சென்னையில் எங்கும் சாலைகள் குண்டும் குழியுமாக காட்சி அளிக்கவில்லை. அதிமுகவின் பி டீ மாக தமிழக ஆளுநர் ரவி செயல்படுகிறார். ஆளுநர் பேசியதை தவறு இல்லையென எடப்பாடி பேசுவது எதிர்பார்த்த ஒன்றுதான்’’ என்றார்.
The post அதிமுகவின் பி டீ மாக தமிழக ஆளுநர் ரவி செயல்படுகிறார்: அமைச்சர் பி.கே.சேகர்பாபு appeared first on Dinakaran.