நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் அருகே பள்ளத்தில் தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்துகுள்ளானதில் 20 பேர் காயம் அடைந்துள்ளனர். வளைவில் அதிவேகமாக திரும்பிய போது, கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. விபத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.