இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 1,219 மீனவர்களில்1,106 பேர் விடுவிப்பு

கவர்னர் உரையில் கூறியிருப்பதாவது: கொரோனாவுக்கு பிந்தைய கடினமான காலக்கட்டத்தில், கடன்களுக்கான உத்தரவாதங்களை நிதி நிறுவனங்களுக்கு வழங்கிடும் வகையில், ‘தமிழ்நாடு கடன் உத்தரவாதம் திட்டம்’ என்ற திட்டத்தை அரசு அறிமுகப்படுத்தியது. இதன் விளைவாக குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு 2023-24ம் நிதியாண்டில் ரூ.4,115 கோடி கடனாக வழங்கப்பட்டுள்ளது. மீனவர்களின் பாதுகாப்பிற்கு தமிழக அரசு மிகுந்த முக்கியத்துவம் அளித்து வருகிறது.

கடந்த 2021ம் ஆண்டு முதல் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 1,219 மீனவர்களில், மாநில அரசின் அயராக முயற்சிகளின் பலனாக 1,106 மீனவர்கள் விடுவிக்கப்பட்டு தமிழ்நாட்டிற்கு திரும்பியுள்ளனர். எஞ்சியுள்ள மீனவர்களை உடனடியாக விடுவித்திடவும், இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணவும், தூதரக நடைமுறைகள் மூலம் உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஒன்றிய அரசை மாநில அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

The post இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 1,219 மீனவர்களில்1,106 பேர் விடுவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: