ஆளுநர் உரையில் கூறியிருப்பதாவது: நாட்டின் 2வது மிகப்பெரிய பொருளாதாரமாக தமிழ்நாடு இன்று திகழ்கிறது. வளர்ச்சிக்கு எடுத்துக்காட்டாகவும் விளங்குகிறது. முந்தைய ஆண்டுகளில் தேசிய ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5.4 சதவிகிதமாக இருந்த நமது மாநிலத்தின் பங்கு, கடந்த 40 ஆண்டுகளின் 9.21 சதவிகிதமாக உயர்ந்துள்ளதே திராவிட இயக்க கொள்கைக்கு கிடைத்த வெற்றி. இதனை முன்னேற்றிடும் வகையில் எதிர்வரும் 2030ம் ஆண்டிற்குள் தமிழ்நாட்டினை 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக உயர்த்துவதை தமிழ்நாடு தனது இலக்காக கொண்டுள்ளது. மருத்துவம், கல்வி மற்றும் சமூகநலனையும் மேம்படுத்துவதிலும் நாட்டிற்கே முன்னோடியாக தமிழ்நாடு விளங்குகிறது.
தொலைநோக்கு பார்வைகொண்ட தலைவர்களின் வழியில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் எதிர்கால தலைமுறைகளின் வாழ்வை செம்மையாக வடிவமைத்திடுவதற்காக பல முன்னோடி திட்டங்களை அறிமுகப்படித்தியுள்ளார். சிறந்த திட்டங்களின் ஒன்றான கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் மூலம் 1.15 கோடி குடும்பங்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 உரிமைத்தொகை வழங்கி வருகிறது. மகளிர் விடியல் பயணத்திட்டத்தை அறிமுகப்படுத்தியதன் மூலம் தமிழ்நாடு நாட்டிற்கே முன்னோடியாக திகழ்கிறது.
The post நாட்டின் 2வது மிகப்பெரிய பொருளாதாரமாக தமிழ்நாடு திகழ்கிறது appeared first on Dinakaran.