இதுகுறித்து வெங்கடாச்சலத்தின் மீது கோபிச்செட்டிபாளையம் போலீசில் கந்தசாமி புகார் கொடுத்துள்ளார். அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து இந்த முறைகேடு நடந்துள்ளது. இந்நிலையில், கந்தசாமிக்கு எதிராக சுகுணாம்பால், கோபிச்செட்டிபாளையம் மாவட்ட முன்சீப் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு லோக் அதாலத்திற்கு மாற்றம் செய்யப்பட்டு தீர்வு காணப்பட்டது. தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து ரூ.20 கோடி அளவில் சொத்துக்களை சுகுணாம்பாள் பெயரில் வெங்கடாச்சலம் வாங்கி குவித்துள்ளார். இதன்மூலம் அரசுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து கடந்தாண்டு ஜூன் 15ம் தேதி தமிழக அரசுக்கும், மத்திய விஜிலன்ஸ் இயக்குருக்கும், தமிழக ஊழல் தடுப்பு துறைக்கும், மத்திய ஆடிட்டர் ஜெனரல் அலுவலகத்திற்கும் புகார் கொடுத்தேன். புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, எனது புகார் மீது உரிய நவடிக்கை எடுக்குமாறு விஜிலன்ஸ் இயக்குநர் உள்ளிட்டோருக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த மனு நீதிபதி என்.சேஷசாயி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, லஞ்ச ஒழிப்பு துறை சார்பில் ஆஜரான அரசு வழக்கறிஞர் முகிலன், மனுதாரரின் புகார்மீது விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றார். இதை பதிவு செய்த நீதிபதி வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார்.
The post சந்தை மதிப்பை குறைத்து காட்டி சொத்து வாங்கிய விவகாரம் ஐஏஎஸ் அதிகாரி சொத்து குவித்த விவகாரம் மீது விசாரணை: சென்னை உயர் நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்பு துறை தகவல் appeared first on Dinakaran.