சென்னை: இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு முன்னிலையில் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் ஆண்டாள் நாச்சியார் அருளிய திருப்பாவை பாசுர பாராயணம் நிகழ்ச்சி நடைபெற்றது. திருப்பாவை பாராயணத்தை பக்தர்கள் பக்தி பரவசத்துடன் கேட்டு மகிழ்ந்தனர். இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள கோயில்களில் கந்தசஷ்டி பெருவிழா மற்றும் வைகுண்ட ஏகாதசி பெருவிழாவின்போது தமிழ்நாடு இசை மற்றும் கவின்கலை பல்கலைக்கழகம் மற்றும் அரசு இசைக் கல்லூரி மாணவ மாணவியரின் பங்கேற்புடன் கந்தசஷ்டி பாராயணம் மற்றும் திருப்பாவை பாராயணம் நிகழ்ச்சி ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது.
கந்தசஷ்டி பெருவிழாவை முன்னிட்டு வடபழனி ஆண்டவர் கோயில், கந்தக்கோட்டம், முத்துக்குமார சுவாமி கோயில், திருவான்மியூர், பாம்பன் சுவாமிகள் கோயில் மற்றும் அறுபடைவீடு முருகன் கோயில்களில் கந்தசஷ்டி பாராயணம் நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு முன்னிலையில் திருவல்லிக்கேணி, பார்த்தசாரதி கோயிலில் தமிழ்நாடு இசை மற்றும் கவின்கலை பல்கலைக்கழகம் மற்றும் அரசு இசைக் கல்லூரி மாணவ மாணவியரின் திருப்பாவை பாராயணம் நிகழ்ச்சி நடைபெற்றது.
திருப்பாவை பாராயணத்தை பக்தர்கள் பக்தி பரவசத்துடன் கேட்டு மகிழ்ந்தனர். இந்நிகழ்ச்சியில் சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர் சந்திரமோகன், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் தர், கூடுதல் ஆணையர் டாக்டர்சுகுமார்,, இணை ஆணையர் கி.ரேணுகாதேவி, துணை ஆணையர்/செயல் அலுவலர் சி.நித்யா மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
The post அமைச்சர் பி.கே.சேகர்பாபு முன்னிலையில் பார்த்தசாரதி கோயிலில் திருப்பாவை பாராயணம் appeared first on Dinakaran.