சென்னையில் தி.மு.க. மாணவர் அணி மாவட்ட, மாநில அமைப்பாளர் கூட்டம்: 9ம் தேதி நடக்கிறது

சென்னை: திமுக மாணவர் அணிச் செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன் எம்.எல்.ஏ. நேற்று வெளியிட்ட அறிவிப்பு: திமுக மாணவர் அணியின் மாவட்ட, மாநகர, மாநில அமைப்பாளர்கள் கூட்டம், வருகிற 9ம் தேதி(வியாழக்கிழமை) மாலை 4.30 மணியளவில், சென்னை, அண்ணா அறிவாலயத்தில், எனது தலைமையில், மாநில மாணவர் அணித் தலைவர் இரா.ராஜீவ்காந்தி-இணைச் செயலாளர்கள் சி.ஜெரால்டு, எஸ். மோகன் மற்றும் துணைச் செயலாளர்கள் மன்னை த.சோழராஜன், சேலம் ரா.தமிழரசன், அதலை பி.செந்தில்குமார், கா.அமுதரசன், பி.எம்.ஆனந்த், கா.பொன்ராஜ், வி.ஜி.கோகுல், பூர்ணசங்கீதா, ஜெ.வீரமணி ஆகியோர் முன்னிலையில் நடைபெற உள்ளது.

இதில் மாவட்ட, மாநில அமைப்பாளர்கள் மட்டும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். கல்லூரிகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள தமிழ் மாணவர் மன்றத்தின் நிரப்பப்பட்ட உறுப்பினர் விண்ணப்பப்படிவம் மற்றும் நிர்வாகிகள் பட்டியல் ஒப்படைத்தல், அணியின் சார்பாக மாவட்ட அளவில் நடத்தப்பட்ட நிகழ்ச்சிகள்,செயல்பாடுகள் குறித்த மினிட் புத்தகம் ஆய்வு, மாணவர் அணி ஆக்கப் பணிகள் குறித்து விவாதிக்கப்படும்.

The post சென்னையில் தி.மு.க. மாணவர் அணி மாவட்ட, மாநில அமைப்பாளர் கூட்டம்: 9ம் தேதி நடக்கிறது appeared first on Dinakaran.

Related Stories: