சென்னை: தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து பல்வேறு இடங்களுக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகைக்கு இன்னும் ஒரு வார காலமே உள்ளது. எனவே பொங்கல் பண்டிகையை கொண்டாட தமிழக மக்கள் தயாராகி வருகின்றனர். எனவே வேலைக்காக சொந்த ஊரை விட்டு லட்சக்கணக்கான மக்கள் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் வசித்து வருகிறார்கள். எனவே தொடர் விடுமுறை நாட்கள் அல்லது விஷேச நாட்களில் மட்டும் வெளியூருக்கு செல்வார்கள்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தாம்பரம் – திருச்சி இடையே சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. ஜனவரி 4, 5, 10, 11, 12, 13, 17, 18, 19ஆம் தேதிகளில் தாம்பரத்தில் இருந்து மாலை 3.30 மணிக்கு ஜன் சதாப்தி சிறப்பு அதி விரைவு ரயில் இயக்கம்; மறு மார்க்கத்தில் திருச்சியில் இருந்து 4, 5, 10, 11, 12, 13, 17, 18, 19 ஆம் தேதிகளில் மாலை 5.35 மணிக்கு சிறப்பு ரயில் தாம்பரத்திற்கு இயக்கம்
ரயில் எண். 06190/06191 திருச்சிராப்பள்ளி – தாம்பரம் – திருச்சிராப்பள்ளி ஜன் சதாப்தி அதிவிரைவு சிறப்பு ரயில்களின் நேரம் மற்றும் நிறுத்தங்கள் விவரம் பின்வருமாறு. திருச்சியில் இருந்து மாலை 5.35 க்கு புறப்படும் இந்த ரயில் திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், பாபநாசம், கும்பகோணம், மயிலாடுதுறை, சீர்காழி, சிதம்பரம், திரிபாதிரிப்புலியூர், பண்ருட்டி, விழுப்புரம், திண்டிவனம், மேல்மருவத்தூர், செங்கல்பட்டு வழியாக இரவு 12.30 மணிக்கு தாம்பரம் சென்றடையும். அதேபோல் தாம்பரத்திலிருந்து காலை 11.35 மணிக்கு புறப்பட்டு மாலை 3.30 மணிக்கு திருச்சி சென்றடையும்.
The post பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தாம்பரம் – திருச்சி இடையே சிறப்பு ரயில் appeared first on Dinakaran.