பொங்கல் சிறப்பு ரயில்களில் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தன

சென்னை: பொங்கல் சிறப்பு ரயில்களில் காலை 8 மணிக்கு தொடங்கிய முன்பதிவு சில நிமிடங்களில் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தன. தாம்பரம் – நெல்லை சிறப்பு ரயில் உட்பட 5 ரயில்கள் தாம்பரம் – கன்னியாகுமரி, சென்ட்ரல்-நாகர்கோவில் உள்ளிட்ட ரயில்களிலும் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தன. இந்நிலையில் இன்று காலை 8 மணிக்கு தொடங்கிய முன்பதிவு சில நிமிடங்களில் டிக்கெட்டுகள் விற்று தீர்த்தது. இதனால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர்.

பொங்கலை முன்னிட்டு 5 கூடுதல் சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன. சென்னை தாம்பரம் – திருச்சி சிறப்பு ரயில் தாம்பரம் மற்றும் திருச்சி இடையே 06190 மற்றும் 06191 ஜன் சதாப்தி சிறப்பு ரயில் இயக்கப்படும். இந்த ரயில் ஜனவரி 4, 5, 10, 11, 12, 13, 17, 18, 19 ஆகிய தேதிகளில் இயக்கப்படும். இந்த ரயில் திருச்சியில் இருந்து காலை 5.35 மணிக்கு புறப்பட்டு தாம்பரத்துக்கு மதியம் 12:30 மணி, பின்னர் தாம்பரத்தில் இருந்து மதியம் 3:30 மணிக்கு புறப்பட்டு இரவு 11.35 மணிக்கு திருச்சி சென்றடையும். இந்த சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு ஏற்கனவே தொடங்கிவிட்டது.

* சென்னை தாம்பரம் – கன்னியாகுமரி சிறப்பு ரயில் (06093) சென்னை தாம்பரத்தில் இருந்து கன்னியாகுமரிக்கு ஜனவரி 13ம் தேதி சிறப்பு ரயில் (எண். 06093) இயக்கப்படுகிறது. இந்த ரயில் தாம்பரத்தில் இருந்து இரவு 10.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் நள்ளிரவு 12.30 மணிக்கு கன்னியாகுமரி வந்தடையும். இந்த ரயிலுக்கான முன்பதிவு ஜனவரி 5ம் தேதி ஞாயிற்றுக்கிழமை (இன்று)காலை 8 மணிக்கு தொடங்கும்.

* சென்னை தாம்பரம் – ராமநாதபுரம் சிறப்பு ரயில் (06103) ஜனவரி 11, 13, 18 ஆகிய தேதிகளில் சென்னை தாம்பரத்தில் இருந்து ராமநாதபுரத்திற்கு சிறப்பு ரயில் (எண். 06103) இயக்கப்படும். இந்த ரயில் தாம்பரத்தில் இருந்து மாலை 5 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் காலை 5:15 மணிக்கு ராமநாதபுரம் வந்தடையும்.

* சென்னை தாம்பரம் – திருநெல்வேலி சிறப்பு ரயில் (06091) சென்னை தாம்பரத்தில் இருந்து திருநெல்வேலிக்கு ஜனவரி 13, 20, 27 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில் (எண். 06091) இயக்கப்படும். இந்த ரயில் தாம்பரத்தில் இருந்து மாலை 3:30 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4:55 மணிக்கு திருநெல்வேலி வந்தடையும்.

* சென்னை சென்ட்ரல் – நாகர்கோவில் சிறப்பு ரயில் (06089) ஜனவரி 12 மற்றும் 19 ஆகிய தேதிகளில் சென்னை சென்ட்ரலில் இருந்து நாகர்கோவிலுக்கு சிறப்பு ரயில் (எண். 06089) இயக்கப்படும். இந்த ரயில் சென்ட்ரலில் இருந்து இரவு 11:30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் மதியம் 1 மணிக்கு நாகர்கோவிலை வந்தடையும்.

The post பொங்கல் சிறப்பு ரயில்களில் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தன appeared first on Dinakaran.

Related Stories: