இந்நிலையில், கோவையில் டேங்கர் லாரி விபத்து ஏற்பட்ட பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை என ஆட்சியர் அறிவித்துள்ளார். டேங்கர் லாரி விபத்து நடந்த இடத்தில் இருந்து 500 மீட்டர் அருகாமையில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விபத்து நடந்த இடத்தில் 1 கிலோ மீட்டர் சுற்றுவட்டாரத்தில் வசிக்கும் மக்களை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதைத்தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய கோவை மாவட்ட ஆட்சியர் கூறியதாவது; டேங்கர் கவிழ்ந்த இடத்திலிருந்து ஒரு கி.மீ. தொலைவில் உள்ள மக்களை அப்புறப்படுத்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. எந்த அசம்பாவிதமும் நடக்கமால் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
முதற்கட்டமாக வாயுக் கசிவை நிறுத்தியுள்ளோம். திருச்சியிலிருந்து டேங்கர் லாரி தயாரிக்கும் நிறுவனத்திலிருந்து டீம் வரவழைக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அருகில் உள்ள 10 பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 2 லிருந்து 3 மணி நேரத்தில் டேங்கர் லாரியை அப்புறபடுத்தும் பணியாணது நிறைவு பெறும் என நினைக்கிறோம். போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் காவலர்கள் ஈடுபட்டுள்ளார்கள். இந்த விபத்து நடந்தது குறித்து ஆர்.டி.ஓ மற்றும் காவல்துறையினர் விசாரணை நடத்தினால் தான் இந்த விபத்து எப்படி நடந்தது என்று தெரியவரும். என்று கூறியுள்ளார்.
The post கோவையில் டேங்கர் லாரி விபத்து; மீட்பு பணிகளை கோவை மாவட்ட ஆட்சியர் ஆய்வு! appeared first on Dinakaran.