தமிழகத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு பெறுவதற்கான டோக்கன் விநியோகம் செய்யும் பணி தொடங்கியது!!

சென்னை: தமிழகத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு பெறுவதற்கான டோக்கன் இன்று முதல் வீடு வீடாக விநியோகம் செய்யும் பணி தொடங்கி உள்ளது. இந்த பணியில் ரேஷன் கடை ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். பொங்கல் பண்டிகையையொட்டி 2.20 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். இதையடுத்து சம்பந்தப்பட்ட ரேஷன் கடைகள் மூலம் இதற்கான டோக்கன்கள் இன்று முதல் வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

இதைத்தொடர்ந்து, இன்று முதல் ரேஷன் கடை ஊழியர்கள் வீடு வீடாக சென்று டோக்கன் வினியோகம் செய்து வருகின்றனர். அவர்கள் வழங்கும் டோக்கனில் பரிசு தொகுப்பை பெறுவதற்கான நாள், நேரம் ஆகிய விவரங்கள் இடம் பெற்றிருக்கும். தினமும் காலையில் 100 பேர், பிற்பகலில் 100 பேர் பொருள் வாங்கும் வகையில் டோக்கன் வினியோகம் செய்யப்படும் என்று கூட்டுறவு துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து அனைத்து மண்டல இணைப் பதிவாளர்கள், சென்னை மண்டல கூடுதல் பதிவாளருக்கு கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் என்.சுப்பையன் சுற்றறிக்கை அனுப்பி அறிவுறுத்தியுள்ளார்.

The post தமிழகத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு பெறுவதற்கான டோக்கன் விநியோகம் செய்யும் பணி தொடங்கியது!! appeared first on Dinakaran.

Related Stories: