டெல்லி: 2025ம் ஆண்டில் பொது சிவில் சட்டம் கொண்டு வரப்படும் என்று ஒன்றிய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் கூறினார். ஒன்றிய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் அளித்த பேட்டியில், ‘கோவாவில் பொது சிவில் சட்டம் அமலில் உள்ளது. உத்தரகாண்ட் மாநிலம் பொது சிவில் சட்டத்தை நிறைவேற்றி உள்ளது. பாஜகவின் தேர்தல் அறிக்கையில் ெபாது சிவில் சட்டம் கொண்டு வருவதற்கான வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. எந்த சந்தேகமுமின்றி இந்தாண்டு பொது சிவில் சட்டம் கொண்டு வரப்படும். இந்த விவகாரம் இந்திய சட்ட ஆணையத்தின் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு நிலுவையில் உள்ளது.
உத்தரகாண்ட் மாநிலத்தை போலவே மற்ற மாநிலங்களும் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த ஆர்வமாக உள்ளன’ என்றார். இந்த மாத தொடக்கத்தில், பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் பேசுகையில், ‘மதச்சார்பற்ற சிவில் சட்டம் கொண்டு வருவதற்காக ஒன்றிய அரசு முயற்சித்து வருகிறது. இந்திய அரசியலமைப்பைப் புரிந்து கொள்ளாதவர்கள், இந்த நாட்டைப் புரிந்து கொள்ளாதவர்கள்’ என்று கூறினார். ஒன்றிய அரசு கொண்டு வர திட்டமிட்டுள்ள பொது சிவில் சட்டத்திற்கு எதிர்கட்சிகள் கடும் ஆட்சேபணைகளை தெரிவித்து வரும் நிலையில், அச்சட்டத்தை கொண்டு வர பாஜக கூட்டணி அரசு ஆர்வம் காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.
The post இந்தாண்டில் பொது சிவில் சட்டம்: ஒன்றிய அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் உறுதி appeared first on Dinakaran.