அதன்படி, இன்று (03.01.2025), தலைமைச் செயலகத்தில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அரசால் அமைக்கப்பட்ட குழுவினரால் தேர்வுசெய்யப்பட்ட 2016-2017-ஆம் ஆண்டிற்கு கன்னியாகுமரி மாவட்டம், பெருஞ்சாணி அணை, 2017-2018 ஆம் ஆண்டிற்கு ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணை. 2018-2019 ஆம் ஆண்டிற்கு தருமபுரி மாவட்டம், வாணியாறு அணை, 2019-2020 ஆம் ஆண்டிற்கு கன்னியாகுமரி மாவட்டம், பேச்சிப்பாறை அணை, 2020-2021 ஆம் ஆண்டிற்கு சேலம் மாவட்டம், மேட்டூர் அணை மற்றும் 2021-2022 ஆம் ஆண்டிற்கு தென்காசி மாவட்டம், கருப்பாநதி அணை ஆகிய 6 அணைகளில் பணிபுரிந்த செயற் பொறியாளர், உதவி செயற் பொறியாளர் மற்றும் உதவி பொறியாளர் / இளநிலை பொறியாளர் அவர்களை ஊக்குவிக்கும் வகையில் ஊக்க தொகையாக ஒவ்வொருவருக்கும் ரூ.10,000/- வழங்கியும் தலைமைப் பொறியாளர் மற்றும் கண்காணிப்பு பொறியாளர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் கேடயங்களை வழங்கி கெளரவித்தார்.
The post நீர்வளத்துறையின் மூலம் சிறந்த முறையில் பராமரிக்கப்பட்ட 6 அணைகளுக்கு விருது: அமைச்சர் துரைமுருகன் வழங்கினார் appeared first on Dinakaran.