கவுந்தப்பாடி நகராட்சியுடன் பி.மேட்டுப்பாளையம் பேரூராட்சியை இணைக்க பொதுமக்கள் எதிர்ப்பு

கோபி, ஜன.4: புதிதாக உருவாக்கப்பட்ட கவுந்தப்பாடி நகராட்சியுடன் பி.மேட்டுப்பாளையம் பேரூராட்சியை இணைக்க எதிர்ப்பு தெரிவித்து அனைத்து கட்சி கூட்டத்தில் அந்தியூர் சட்டமன்ற உறுப்பினரிடம் வலியுறுத்தினர்.

கோபி அருகே உள்ள கவுந்தப்பாடி ஊராட்சியில் மக்கள் தொகை பெருக்கம், வணிக நிறுவனங்கள், குடியிருப்புகள் அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் கவுந்தப்பாடியை நகராட்சியாக தரம் உயர்த்தியும், இந்த நகராட்சியுடன் அருகில் உள்ள சலங்கபாளையம் மற்றும் பி.மேட்டுப்பாளையம் பேரூராட்சிகளை இணைத்தும் புதிய நகராட்சி உருவாக்க அரசாணை வெளியிடப்பட்டது. இந்நிலையில், கவுந்தப்பாடி நகராட்சியுடன் பி.மேட்டுப்பாளையம் பேரூராட்சியை இணைக்க எதிர்ப்பு தெரிவித்து நேற்று அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. ஏ.ஜி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ. மற்றும் பல்வேறு அரசியல் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்ட கூட்டத்தில் பி.மேட்டுப்பாளையம் பேரூராட்சியை கவுந்தப்பாடி நகராட்சியுடன் இணைக்கும் முடிவை ரத்து செய்ய வேண்டும் என ஏ.ஜி.வெங்கடாசலம் எம்எல்ஏவிடம் வலியுறுத்தினர்.

The post கவுந்தப்பாடி நகராட்சியுடன் பி.மேட்டுப்பாளையம் பேரூராட்சியை இணைக்க பொதுமக்கள் எதிர்ப்பு appeared first on Dinakaran.

Related Stories: