புழல், ஜன. 1: செங்குன்றம் அடுத்த விளாங்காடுப்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட சிறுகாவூர், பத்மாவதி நகர் அருமந்தை பிரதான சாலையில் வசித்து வருபவர் துரைராஜ் (58). வீட்டின் முன்பு டீக்கடை மற்றும் டிபன் கடை நடத்தி வருகிறார். இவர், வழக்கம்போல் நேற்று முன்தினம் இரவு கடையை பூட்டிவிட்டு, வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தார். நள்ளிரவில் திடீரென டீக்கடை தீப்பிடித்து எரிவதைக் கண்டு அதிர்ச்சியடைந்த துரைராஜ், இதுகுறித்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்துள்ளார்.
அதன்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற செங்குன்றம் தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை முற்றிலுமாக அணைத்தனர். விபத்தில் டீக்கடையில் இருந்த பிரிட்ஜ் மற்றும் பாத்திரங்கள் எரிந்து நாசமானது. இந்த, தீவிபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த செங்குன்றம் போலீசார், மின் கசிவால் விபத்து ஏற்பட்டதா? அல்லது யாரேனும் டீக்கடைக்கு தீ வைத்தார்களா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post செங்குன்றம் அருகே டீ கடையில் தீ விபத்து appeared first on Dinakaran.