திருவள்ளூர்: திருவேற்காட்டில் அமைந்துள்ள எஸ்.ஏ.கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் கணிதத்துறை மற்றும் மேத்லெட்ஸ் கிளப் இணைந்து தேசிய கணித தினத்தை கொண்டாடின. விழாவிற்கு கல்லூரி தாளாளர் ப.வெங்கடேஷ் ராஜா தலைமை தாங்கினார். விழாவை முன்னிட்டு கல்லூரிகளுக்கு இடையேயான கனெக்சன், வினாடி- வினா, மெஹந்தி, வரைகலை ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டன. 15 கல்லூரிகளைச் சேர்ந்த 217 மாணவர்கள் போட்டிகளில் கலந்து கொண்டனர். மகளிர் கல்லூரி கணிதத் துறை உதவிப் பேராசிரியர் கவிதா கலந்துகொண்டு ‘செயற்கை நுண்ணறிவில் கணிதம் மற்றும் புள்ளியியலின் பங்கு’ என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். இந்த நிகழ்ச்சியில் செவாலியர் தாமஸ் எலிசபெத் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுத் தொகையும், சான்றிதழ்களும் வழங்கினார். இந்த நிகழ்ச்சி மாணவர்களுக்குக் கணிதம் மற்றும் புள்ளியியல் துறையில் ஆக்கப்பூர்வமான திறன்களை உருவாக்க ஒரு தளத்தை வழங்கியதோடு, சமீபத்திய போக்குகளை முன்னிலைப்படுத்தவும் உதவியது.
The post எஸ்.ஏ. கல்லூரியில் தேசிய கணித தினம் appeared first on Dinakaran.