கடந்த 2023ம் ஆண்டு நவம்பரில் விசாரணை நீதிமன்றத்தின் தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது. நிமிஷாவை மீட்டு இந்தியா அழைத்து வருவதற்காக அவரது குடும்பத்தினர் போராடி வருகின்றனர். இந்நிலையில் நிமிஷாவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு அந்நாட்டு அதிபர் ரஷாத் அல் அலிமி ஒப்புதல் அளித்துள்ளார். இதனையடுத்து தண்டனை விரைவில் நிறைவேற்றப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே இந்திய வெளியுறவு துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ரந்திர் ஜெய்ஸ்வால் கூறுகையில், ‘‘ஏமனில் நிமிஷாவிற்கு தண்டனை விதிக்கப்பட்டது குறித்து எங்களுக்கு தெரியும். இந்த விவகாரத்தில் அரசு அனைத்து உதவிகளையும் செய்து வருகின்றது” என்றார்.
The post கேரள நர்சுக்கு மரண தண்டனை ஏமன் அதிபர் ஒப்புதல் appeared first on Dinakaran.