பெரம்பலூரில் தொடர் மழை காரணமாக கொள்ளளவை எட்டியதால் 51 ஏரிகள் நிரம்பி வழிகிறது

பெரம்பலூர், டிச.27: தொடர் மழை காரணமாக பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 51 ஏரிகள் 100 சதவீத கொள்ளளவை எட்டியதால் நிரம்பி வழிகின்றன என்று நீர் வளத்துறை உதவி செயற் பொறியாளர் சீனிவாசன் தெரிவித்துள்ளார். பெரம்பலூர் மாவட்ட நீர் வளத் துறையின் கட்டுப்பாட்டில் 73 ஏரிகள் உள்ளன. அன்னமங்கலம் அருகே விசுவக்குடியில் கல்லாற்றின் குறுக்கே கட்டப்பட்ட விசுவக்குடி நீர்த்தேக்கம், கொட்டரைப் பகுதியில் மருதையாற்றின் குறுக்கே கட்டப்பட்ட கொட்டரை நீர்த்தேக்கம் என 2 நீர்த் தேக்கங்கள் உள்ளன.

பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த அக்டோபர் மாதம் முதல் தொடர்ச்சியாகப் பெய்துவரும் வடகிழக்குப் பருவமழை, பெஞ்சல் புயல், பின்னர் வங்கக் கடலில் ஏற் பட்டகுறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரண மாக, அடுத்தடுத்து பெய்து வந்த அடை மழை போன்ற வற்றால் பெரம்பலூர் மாவ ட்டத்திற்கு நடப்பு ஆண்டு நல்ல மழையே பெய்தது.

இதனால் அரும்பாவூர் பெரியஏரி, அரும்பாவூர் சித்தேரி, வெண்பாவூர் ஏரி, வடக்கலூர் ஏரி, பேரையூர் ஏரி, வி.களத்தூர் பெரிய ஏரி, வடக்கலூர் அக்ரஹாரம் ஏரி, வெங்கலம் சின்ன ஏரி, தழுதாழை ஏரி, ஒகளூர் ஏரி, அகரம் சீகூர் ஏரி, கீரனூர் ஏரி, லாடபுரம் பெரிய ஏரி, குரும்பலூர் பாளையம் ஏரி, பெருமத்தூர் ஏரி, நூத்தப் பூர் ஏரி, டி.களத்தூர் பெரிய ஏரி, கீரவாடி ஏரி, கைப்பெரம்பலூர் ஏரி, நெற்குணம் ஏரி, ஆய்குடி ஏரி, பாண்டகப்பாடி ஏரி, கிழுமத்தூர் ஏரி, கிளியூர் ஏரி, திருவாளந்துறை ஏரி, செஞ்சேரி ஏரி, தேனூர் ஏரி, டி.களத்தூர் சின்ன ஏரி, வயலூர் ஏரி, கீழப் பெரம் பலூர் ஏரி, பெண்ணக்கோ ணம் ஏரி, அத்தியூர் ஏரி, வெங்கலம் பெரிய ஏரி, அரசலூர் ஏரி, பூலாம்பாடி பொன்னேரி, சாத்தனவாடி ஏரி,அரணாரை ஏரி, எழுமூர் ஏரி, ஆண்டிக் குரும்பலூர் ஏரி, வி.களத்தூர் சின்ன ஏரி, தொண்டமாந் துறை ஏரி, பூலாம்பாடி சின்ன ஏரி, பெரம்பலூர் மேல ஏரி, வெங்கனூர் ஏரி, பெரியம்மா பாளையம் ஏரி, பெரம்பலூர் கீழ ஏரி, லாடபுரம் சின்ன ஏரி, கண்டாப்பாடி ஏரி, அன்ன மங்கலம் ஏரி, மேலப்புலி யூர் ஏரி, துறைமங்கலம் பெரிய ஏரி ஆகிய 51- ஏரிகள் தனது 100 சதவீத கொள்ளளவை எட்டி நிரம்பி வழிந்து வருகின்றன.

இவை தவிர காரியானூர் ஏரி, தொண்டப்பாடி ஏரி, களரம்பட்டி ஏரி ஆகிய 3-ஏரிகள் 81 முதல் 90 சதவீத கொள்ளளவை எட்டியுள்ளன. மேலும் கை.களத்தூர் ஏரி, நெய்க் குப்பை ஏரி, வரகுபாடி ஏரி, சின்னாறு ஏரி ஆகிய 4 ஏரிகள் 71சதவீதம் முதல் 80 சதவீத கொள்ளளவை எட்டியுள்ளன. பொம்மனப் பாடி ஏரி, காரை சின்ன ஏரி, தெரணி ஏரி, மதவானை யம்மன் ஏரி ஆகிய 4 ஏரிகள் 51 முதல் 70 சதவீத கொள்ளளவை எட்டி உள்ளன. பிள்ளங்குளம் ஏரி, எசனை ஏரி, கீழப்புலி யூர் ஏரி, நாரணமங்கலம் ஏரி, சிறுவாச்சூர் ஏரி, செங் குணம் ஏரி, துறைமங்கலம் சின்ன ஏரி ஆகிய 7 ஏரிகள் 26 முதல் 50 சதவீதக் கொள் ளளவை எட்டியுள்ளன. காரை பெரிய ஏரி, புது நடுவலூர் ஏரி, அயிலூர் ஏரி, செட்டிக்குளம் ஏரி ஆகிய 4 ஏரிகள் 1 முதல் 25 சதவீதக் கொள்ளளவை எட்டி உள்ளன. விசுவக்குடி, கொட்டரை நீர்த்தேக்கங் கள் ஏற்கனவே 100சதவீதக் கொள்ளளவை எட்டி விட்டன என்று நீர்வளத்துறை உதவி செயற் பொறியாளர் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

The post பெரம்பலூரில் தொடர் மழை காரணமாக கொள்ளளவை எட்டியதால் 51 ஏரிகள் நிரம்பி வழிகிறது appeared first on Dinakaran.

Related Stories: