அனைத்து வணிக நிறுவனங்களில் தமிழில் பெயர் பலகை வைக்க வேண்டும்: அதிகாரிகள் அறிவுறுத்தல்

 

திருப்பூர், டிச. 25: திருப்பூரில் அனைத்து வணிக நிறுவனங்களில் தமிழில் பெயர் பலகை வைக்க வேண்டும் என அதிகாரிகள் ஆய்வு கூட்டத்தில் அறிவுறுத்தினர். திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் தொழிலாளர் துறை மற்றும் வணிக நிறுவன உரிமையாளர்கள், வணிக நிறுவன அமைப்புகளுடன் இணைந்து வணிக நிறுவனங்களில் தமிழில் பெயர் பலகை வைப்பது தொடர்பான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதற்கு திருப்பூர் தொழிலாளர் உதவி ஆணையர் (சட்ட அமலாக்கம்) ஜெயக்குமார் பேசினார்.

அப்போது அவர் பேசுகையில்,“வணிக நிறுவனங்கள் மற்றும் கடை உரிமையாளர்கள் தமிழில் பெயர் பலகை வைக்க வேண்டும், அவ்வாறு பெயர் வைக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும், மேலும், அபராதமும் விதிக்கப்படும்’’ என்றார். முன்னாள் தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் தேவதாசு சிறப்புரையாற்றினார். இதில், செல்போன் ரீடைலர்ஸ் மொத்த விற்பனை சங்க மாவட்ட தலைவர் சேக்ஒளி, வணிகர் சங்க பேரவையின் மாவட்ட செயலாளர் லாலா கணேசன், திருப்பூர் மாவட்ட பேக்கரி உரிமையாளர்கள் சங்க தலைவர் ராஜ்குமார், அவினாசி அனைத்து வியாபாரிகள் சங்க தலைவர் முத்துக்குமரன் மற்றும் பல்வேறு சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

The post அனைத்து வணிக நிறுவனங்களில் தமிழில் பெயர் பலகை வைக்க வேண்டும்: அதிகாரிகள் அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: