சிவகங்கை, டிச.31: திருப்புவனத்தில் மேற்கு ஒன்றிய திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. அவைத் தலைவர் இளங்கோவன் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் வசந்தி சேங்கைமாறன் முன்னிலை வகித்தார். மாவட்ட துணை செயலாளர், திருப்புவனம் பேரூராட்சி சேர்மன் சேங்கைமாறன் தீர்மானங்களை விளக்கி பேசினார். திருப்புவனம் ஒன்றியத்துக்கு உட்பட்ட வாக்குச்சாவடிகளில் நூறு வாக்காளருக்கு ஒருவர் என்ற முறையில் பிஎல்சி நியமிப்பது.
அடுத்த மாதம் சிவகங்கை மாவட்டம் வருகை தர உள்ள தமிழக முதல்வருக்கு திருப்புவனம் ஒன்றியம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிப்பது. தை திருநாளை முன்னிட்டு திமுக கொடியேற்றி, விளையாட்டுப் போட்டிகள் நடத்துவது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் பேரூர் செயலாளர் நாகூர்கனி, பேரூராட்சி துணைத் தலைவர் ரகமத்துல்லாகான், யூனியன் துணை சேர்மன் மூர்த்தி, மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் பொற்கோ, பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் பாலகிருஷ்ணன்,
கண்ணன், வேல்பாண்டி, மாரிதாசன் ஒன்றிய நிர்வாகிகள் ராமலிங்கம், பிச்சைமணி, ஈஸ்வரன், சுப்பையா, அக்னிராஜ், சுப்பிரமணியன், மீனாட்சி சுந்தரம், சக்திமுருகன், வெங்கடேசன், தினகரன், மகேந்திரன், மாவட்ட விவசாய அணி துணை தலைவர் சேகர், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர்கள், தேவதாஸ், அறிவுக்கரசு, மீனவரணி அண்ணாமலை, தொண்டரணி ராஜா, மாணவரணி காளிதாஸ், பாண்டிய கிருஷ்ணன் மற்றும் கிளைக் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள்.
The post சிவகங்கைக்கு அடுத்த மாதம் வரும் முதல்வருக்கு சிறப்பான வரவேற்பு: திமுக செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் appeared first on Dinakaran.