திருப்புவனம்,டிச.31: திருப்புவனம் அருகே பிரசித்தி பெற்ற அடைக்கலம் காத்த அய்யனார் மற்றும் பத்ரகாளியம்மன் கோயில் உள்ளது. அறநிலையத்துறை நிர்வாகத்தில் உள்ள இக்கோயிலில் ஞாயிறு, செவ்வாய், வெள்ளி மற்றும் பெளர்ணமி நாட்களிலும் ஏராளமான பக்தர்கள் வழிபாடு செய்வது வழக்கம். பக்தர்கள் பல்வேறு வேண்டுதல்களை நிறைவேற்றிய அம்மனுக்கு காணிக்கையாக பணம்,தங்கம், வெள்ளி ஆகியவற்றை காணிக்கையாக உண்டியலில் செலுத்துவார்கள்.
இக்கோயில் காணிக்கை 40 நாட்களுக்கு ஒரு முறை திறக்கப்பட்டு எண்ணுவது வழக்கமாகும். இந்நிலையில் நேற்று உண்டியல்கள் ராமநாதபுரம் துணை ஆணையர் ஞானசேகரன், உதவி ஆணையர் இளங்கோ ஆகியோர் முன்னிலையில் திறக்கப்பட்டது. நிரந்தர 9 உண்டியல்களில் ரூ.31 லட்சத்து 3 ஆயிரத்து 85 ரூபாயும், கோசாலை உண்டியலில் ரூ.64 ஆயிரத்து 18 ரூபாயும் என மொத்தம் 31லட்சத்து 67ஆயிரத்து 138 ரூபாயும்,பலமாற்று தங்கம் 156கிராம், வெள்ளி 175 கிராம் காணிக்கை செலுத்தப்பட்டுள்ளது என கோயில் செயல்அலுவலரும் உதவி ஆணையருமான கணபதி முருகன் தெரிவித்தார்.
The post மடப்புரம் கோயிலில் ரூ.31.5 லட்சம் உண்டியல் வசூல் appeared first on Dinakaran.