‘நீ மட்டும் செல்போன் பேசலாமா’ கணவரை சரமாரியாக கத்தியால் குத்திய மனைவி: கடமலைக்குண்டு அருகே பரபரப்பு

வருசநாடு: தேனி மாவட்டம், கடமலைக்குண்டு அருகே உள்ள துரைச்சாமிபுரத்தை சேர்ந்தவர் தினகரன் (23), டிரைவர். இவரது மனைவி பிரியா (23). இவர், அடிக்கடி செல்போன் பேசுவதை தினகரன் கண்டித்து வந்துள்ளார். கடந்த 28ம் தேதி தினகரன் வீட்டில் இருந்தபோது, அவரது செல்போனுக்கு அழைப்பு வந்துள்ளது. உடனே வீட்டிற்கு வெளியே சென்று செல்போன் பேசியுள்ளார்.

இதை பார்த்து ஆத்திரமடைந்த பிரியா, ‘நீ மட்டும் செல்போன் பேசலாமா’ என கணவரிடம் இருந்த செல்போனை பறித்து கீழே வீசியுள்ளார். இதை எடுக்க சென்ற தினகரனை, கையில் வைத்திருந்த கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார். இதில், அவருக்கு கை, நெஞ்சில் காயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தினகரன் அளித்த புகாரின்பேரில், பிரியா மீது கடமலைக்குண்டு போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

The post ‘நீ மட்டும் செல்போன் பேசலாமா’ கணவரை சரமாரியாக கத்தியால் குத்திய மனைவி: கடமலைக்குண்டு அருகே பரபரப்பு appeared first on Dinakaran.

Related Stories: