ராணிப்பேட்டை : ராணிப்பேட்டையில் ஆரோக்கியத்தை நோக்கி ஓட்டம் என்ற விழிப்புணர்வு மாரத்தான் போட்டியினை அமைச்சர் ஆர்.காந்தி நேற்று கொடியசைத்து துவக்கிவைத்தார்.
ராணிப்பேட்டை அடுத்த அக்ராவரத்தில், பொதுமக்கள் அனைவரும் ஆரோக்கியத்தை நோக்கி ஒரு ஓட்டம் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மாரத்தான் போட்டி தனியார் அமைப்பு சார்பில் நேற்று நடைபெற்றது.
இந்த போட்டியில் அனைத்து வகை வயது பிரிவினை சேர்ந்த குழந்தைகள், இளைஞர்கள், மாணவ மாணவிகள், பெரியவர்கள் என 2,800 பேர் பங்கேற்றனர். இந்த விழிப்புணர்வு மாரத்தான் போட்டி 42, 21, 10, 5 கிலோ மீட்டர் என நான்கு பிரிவுகளில் நடந்தது. இப்போட்டியினை பெல் ஆன்சிலரி எஸ்டேட்டின் நுழைவு வாயிலில் தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு 5கிலோ மீட்டர் மற்றும் 10கிலோ மீட்டர் மாரத்தான் போட்டியை கொடியசைத்து துவக்கிவைத்தார்.
மேலும் 21கி.மீ, 42கி.மீ பிரிவுகளை திமுக சுற்றுச்சூழல் அணி மாநில துணை செயலாளர் வினோத்காந்தி, ஆற்காடு எம்எல்ஏ ஈஸ்வரப்பன் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர். இந்த நான்கு பிரிவுகளிலும் முதல் மூன்று இடங்களை பிடித்தவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. மாரத்தான் போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் மெடல், டி-ஷர்ட், ஸ்னாக்ஸ் மற்றும் காலை உணவு ஆகியவை வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் பெல் செயல் இயக்குனர் அருன்மொழி தேவன், வாலாஜா ஒன்றியக்குழு தலைவர் வெங்கட்ரமணன், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் வினோத், மாவட்ட சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர் பிஎல்டி சிவா, ஊராட்சிமன்ற தலைவர்கள் முருகன், கோகுலன், அதிமுக மாவட்ட செயலாளர் எஸ்.எம்.சுகுமார், தனியார் அமைப்பு தலைவர் கணேசன், செயலாளர் ராஜவேலு, தோல் தொழில் நிறுவனங்கள் பெல் ஆன்சிலரி நிறுவனங்கள், வெல்லூர் மிட் டவுன் ரோட்டரி தலைவர், ராணிப்பேட்டை மாவட்ட சிறு,குறு தொழில்கள் சங்கம், பெல் ஆன்சிலரி அசோசியேசன், ராணிப்பேட்டை, பெல் சப்ளையர் அசோசியேசன் உள்பட போட்டியாளர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
The post ராணிப்பேட்டை அருகே ‘ஆரோக்கியத்தை நோக்கி’ மாரத்தான் ஓட்டம் appeared first on Dinakaran.