அப்போது, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டம் மற்றும் மாவட்ட ஊராட்சி குழு நிதியில் இருந்து ரூ.30.18 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் புதிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டிட பணியை பார்வையிட்டு ஆய்வு செய்து, பணியை தரமாகவும், விரைவாகவும் முடிக்க அதிகாரிகளிடம் கேட்டுக் கொண்டார்.
பின்னர் கலைஞர் கனவு இல்லை திட்ட பயனாளிகளை சந்தித்து பணி ஆணை பெற்று பணிகளை தொடங்காத பயனாளிகளிடம் தாமதமின்றி உடனடியாக பணிகளை தொடங்க அறிவுறுத்தினார். முன்னதாக கோடம்பாக்கம் ஊராட்சியில் ரேஷன் கடைக்கு சென்று ஆய்வு செய்த கலெக்டர் அங்கு பொருட்கள் விற்பனை, எடை அளவு குறித்து விற்பனையாளரிடம் கேட்டு எடை அளவை பரிசோதித்தார்.
ஆய்வின் போது, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஜெயசுதா, ஊராட்சி மன்ற தலைவர்கள் கிருஷ்ணமூர்த்தி, வளர்மதி சுப்பிரமணியம்,செயற்பொறியாளர் செந்தில்குமார், உதவி செயற்பொறியாளர் ஜெரால்ட், பிடிஓக்கள் ரவிச்சந்திரன், தாசபிரகாஷ், ஊராட்சி செயலர் ரத்தினம் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
The post பாணாவரம் அடுத்த வெளிதாங்கிபுரத்தில் கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணிகளை கலெக்டர் ஆய்வு appeared first on Dinakaran.