இந்த விபத்து குறித்து நாகை துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட சிவகங்கை கப்பலில் இருந்த பணியாளர்கள் இந்திய கடற்படைக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பின்னர் இந்திய கடற்படைக்கு சொந்தமான படகில் கடற்படை அதிகாரிகள் மீனவர்களை மீட்க சென்றனர். அப்போது இரத்தின வேல், இரத்தின சாமி ஆகிய இருவரும் மீட்கப்பட்டனர். இந்த சூழலில் கடலில் விழுந்து மயமான மற்றொரு மீனவர் சித்தாவை தேடும் பணியில் கடற்படை வீரர்கள் முழுவீச்சில் ஈடுபட்டு வருகின்றனர். நாகை முகத்துவாரத்தில் படகு கவிழ்ந்து கடலில் தத்தளித்த மீனவர்களை மீட்கும் காட்சி வெளியாகியுள்ள நிலையில், இது மீனவர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மீனவர்களுடைய உறவினர்கள் நாகை துறைமுகத்தில் திரண்டு, காணாமல் போன மீனவரை மீட்டு தர கடற்படை அதிகாரிகளிடம் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post நாகை முகத்துவாரத்தில் பைபர் படகு கவிழ்ந்து விபத்து.. கடலில் தத்தளித்த 2 மீனவர்கள் மீட்பு: ஒருவரை தேடும் பணி தீவிரம்!! appeared first on Dinakaran.