×

தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸை இன்று சந்திக்கிறார் அன்புமணி!

சென்னை: தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸை இன்று அன்புமணி சந்திக்கிறார். புதுச்சேரியில் நேற்று நடந்த பாமக சிறப்பு பொதுக்குழுவில் ராமதாஸ் அன்புமணி இடையே கடும் மோதல் ஏற்பட்டது. பாமக இளைஞரணி தலைவராக முகுந்தன் என்பவரை நியமிக்க அன்புமணி கடும் எதிர்ப்பு தெரிவித்தார். விருப்பமில்லை என்றால் விலகிக் கொள்ளலாம் என்று அன்புமணியை எச்சரித்திருந்தார் பாமக நிறுவனர் ராமதாஸ். ஜி.கே.மணி உள்ளிட்டோர் இருவரிடமும் சமாதான பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் இன்று சந்திப்பு என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

The post தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸை இன்று சந்திக்கிறார் அன்புமணி! appeared first on Dinakaran.

Tags : Anbumani ,Pamaka ,Ramadas ,Thailapuram Garden ,Chennai ,Ramdas Anbumani ,Bamaka Special General Committee ,Puducherry ,MUKUNDAN ,
× RELATED பாமக நிறுவனர் ராமதாஸ் அன்புமணி இடையே நீடிக்கும் சமரச பேச்சு!