- வட சென்னை
- அமைச்சர்
- சேகர்பாபு
- சென்னை
- சென்னை பெருநகர வளர்ச்சிக் கழகம்
- வால்டாக்ஸ் சாலை
- ஸ்டான்லி மருத்துவமனை
- அபிவிருத்தி திட்டம்
- பி.கே.சேகர்பாபு
- தின மலர்
சென்னை: வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின்கீழ் சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் வால்டாக்ஸ் ரோடு மற்றும் ஸ்டான்லி மருத்துவமனை அருகில் நடைபெற்று வரும் புதிய குடியிருப்புத் திட்டப் பணிகளை மேலும் துரிதப்படுத்தும் வகையில், அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் விரிவாக்கப் பணிகள் சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் சார்பில் நடைபெற்று வருகிறது. இந்த திட்டங்களை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு டிசம்பர் 4ம்தேதி தொடங்கி வைத்தார். அதன்படி, சென்னை, வால்டாக்ஸ் ரோடு, தண்ணீர் தொட்டி தெருவில் துரிதமாக நடைபெற்று வரும் 700 புதிய குடியிருப்புகளுக்கான பணிகளையும் மற்றும் சென்னை ஸ்டான்லி மருத்துவமனை, தங்கசாலை மேம்பாலம் அருகில் துரிதமாக நடைபெற்று வரும் 776 புதிய குடியிருப்புகளுக்கான பணிகளையும் அமைச்சரும், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவருமான பி.கே.சேகர்பாபு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது திட்ட பணிகளை தரமாக செய்யவும், பணிகளை விரைவுபடுத்துவது குறித்து ஒப்பந்ததாரர்களை அறிவுறுத்தினார். இதை தொடர்ந்து துறைமுகம் சட்டமன்ற தொகுதி, மண்டலம் 5, வார்டு 57, சவுக்கார்பேட்டை, டேவிட்சன் தெருவில் இடிந்த நிலையில் உள்ள பழைய பத்திரப் பதிவு அலுவலக கட்டிடத்தை நேரில் சென்று பார்வையிட்டு களஆய்வு செய்தார்.
இந்த ஆய்வுகளின் போது மாநகராட்சி மண்டலக் குழுத்தலைவர் ராமுலு, செயற்பொறியாளர் லோகேஷ்வரன், உள்ளாட்சிப் பிரதிநிதிகளை சேர்ந்த முரளி, ராஜசேகர், ராம்மூர்த்தி, கதிரவன், பரத், கவியரசு ஆகியோர் உடனிருந்தனர்.
The post வடசென்னை வளர்ச்சி திட்ட பணிகள்; புதிய குடியிருப்பு கட்டுமான பணிகளை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு: பணிகளை விரைவுபடுத்த உத்தரவு appeared first on Dinakaran.