×

செங்குன்றத்தில் ஓவியர்களுக்கு நல வாரிய அடையாள அட்டை

புழல்: செங்குன்றத்தில் தமிழ்நாடு அரசு அமைப்புசாரா ஓவியர்கள் நல வாரியத்தில் பதிவு செய்த ஓவியர்களுக்கு நல வாரிய அடையாள அட்டை வழங்கப்பட்டது. தமிழ்நாடு ஓவியர்கள் சங்கத்தின் திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் புழல் ஒன்றிய ஓவியர்கள் சார்பில், தமிழ்நாடு அரசு அமைப்புசாரா ஓவியர்கள் நல வாரியத்தில் பதிவு செய்த ஓவியர்களுக்கு, நல வாரிய அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி மாநில இணை பொதுச்செயலாளர் எல்.சி.நாராயணன் தலைமையில் நேற்று செங்குன்றம் தனியார் சமுதாய கூடத்தில் நடந்தது.

திருவள்ளூர் மாவட்ட பொருளாளர் செங்குன்றம் எம்.ஆர்.கிருஷ்ணா, திருவள்ளூர் மாவட்ட இணை செயலாளர் புழல் ஜி.ஆனந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் தமிழ்நாடு மாநில தலைவர் ஜே.பி.கிருஷ்ணா, மாநில செயல் தலைவர் மனோகரி கிருஷ்ணா, மாநில பொதுச்செயலாளர் பாப்புலர் கே.சேகர், மாநில பொருளாளர் கே.பழனிச்சாமி ஆகியோர் ஓவியர்களுக்கு, நல வாரிய அடையாள அட்டைகளை வழங்கி, சிறப்புரையாற்றினர்.

இந்நிகழ்ச்சியில் புழல் ஒன்றிய அவைத்தலைவர் எம்.சீனிவாசன், புழல் ஒன்றிய செயலாளர் கே.சுகந்தர், புழல் ஒன்றிய பொருளாளர் என்.வெங்கட், கே.அரசு, கே.கிறிஸ்டோபர், டி.செழியன், ஓவியர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். முடிவில் என்.எஸ்.உதயா நன்றியுரை ஆற்றினார்.

The post செங்குன்றத்தில் ஓவியர்களுக்கு நல வாரிய அடையாள அட்டை appeared first on Dinakaran.

Tags : Wormwood ,Tamil Nadu Government Non-Organised Painters Welfare Board ,Nala Board ,Tamil Nadu Painters Association of Thiruvallur Eastern District Workers' Union Painters ,Government of Tamil Nadu NGO Painters ,Painters ,Dinakaran ,
× RELATED புழல் சிறை கைதி மரணம்