- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- அமைச்சர் அன்பில் மகேஷ்
- சென்னை
- பள்ளி கல்வி
- அமைச்சர்
- அன்பில் மகேஷ்
- தின மலர்
சென்னை: தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சியில் தனியார் பள்ளிகளின் பங்கு கணிசமான அளவில் உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார். தனியார் சுயநிதியில் இயங்கும் பள்ளிகளின் சார்பில் பல்வேறு சங்கங்கள் தமிழ்நாட்டில் இயங்கி வந்தன. அரசிடம் கோரிக்கை வைப்பதில் ஏற்படும் சிரமங்களை கருத்தில் கொண்டு அனைத்து சங்கங்களும் ஒன்றாக இணைவது என்று முடிவு எடுத்து, தனியார் பள்ளிகள் சங்கம் என்ற பெயரில் புதிய சங்கம் தொடங்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி புதிய சங்கத்தின் தொடக்க விழா சென்னையில் கலைவாணர் அரங்கில் நேற்று நடந்தது.
இந்த விழாவுக்கு தனியார் பள்ளிகள் சங்கத்தின் மாநில தலைவர் அரசகுமார் தலைமை தாங்கினார், மாநில பொதுச் செயலாளர் இளங்கோவன், முன்னிலை வகித்தார். பொதுச் செயலாளர் நந்தகுமார் வரவேற்றார். பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் மதுமதி, தொடக்க கல்வி இயக்குநர் நரேஷ், தனியார் பள்ளிகள் இயக்குநர் பழனிச்சாமி, தமிழ்நாடு பெற்றோர் ஆசிரியர் கழகத்துணைத் தலைவர் முத்துக்குமார் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.
அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி சங்கத்தை ெதாடங்கி வைத்து பேசியதாவது:
உங்கள் கோரிக்கைகளை உடனடியாக தலைமைச் செயலாளருக்கு அனுப்பி அவரின் கருத்துகளை கேட்டுள்ளோம். படிப்படியாக நடவடிக்கை எடுக்கப்படும்.கட்டாய கல்வி திட்டத்துக்கான கல்விச் செலவை அந்தந்த ஆண்டில் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கை மீது பேச்சுவார்த்தை நடத்தப்படும். இவ்வாறு அவர் பேசினார்.
The post தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சியில் தனியார் பள்ளிகள் பங்கு கணிசமானது: அமைச்சர் அன்பில் மகேஷ் பேச்சு appeared first on Dinakaran.