×

வீட்டின் வெளியே விளையாடியபோது ஏரி கால்வாயில் தவறி விழுந்து 3 வயது சிறுவன் பரிதாப பலி

திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த வெங்கத்தூர் ஆர்ஆர்கே பகுதியை சேர்ந்த பெயின்டர் செந்தில் குமார். இவரது மனைவி மங்கை. 12 வயது மகள் ஜீவிதா. மகன் மித்ரன்(3). இந்நிலையில், நேற்று காலை வழக்கம் போல் செந்தில்குமார் வேலைக்கு சென்ற நிலையில் அவருடைய மனைவி மங்கை வீட்டின் பின்புறமாக துணி துவைத்துக்கொண்டு இருந்துள்ளார். அப்போது அவருடைய மகன் மித்ரன் வீட்டின் முன்புறமாக வெளியே விளையாடிக் கொண்டு இருந்துள்ளார்.

சிறிது நேரத்தில் மகனை காணாததை கண்டு தாய் மங்கை அக்கம்பக்கம் உள்ள வீட்டாரிடம் விசாரித்தும் எந்த தகவலும் கிடைக்காததால் அதிர்ச்சி அடைந்து அக்கம் பக்க்தில் தேடியுள்ளார். பின்னர் வீட்டிலிருந்து 10 அடி தொலைவில் அரண்வாயல் ஏரிக்குச் செல்லும் கால்வாய் வழித்தடத்தில் சென்று பார்த்தபோது சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்ததைக் கண்டு தாய் கதறி அழுதுள்ளார்.

இதைக்கண்ட அக்கம்பக்கத்தினர் சிறுவன் உடலை மீட்டனர். பின்னர் இச்சம்பவம் தொடர்பாக மணவாளநகர் போலீசார் தகவல் அறிந்து, அச்சிறுவன் உடலை மீட்டு திருவள்ளூர் அரசு பொது மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை முடிவடைந்த பின்னர் சிறுவன் உடலை போலீசார் உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.

The post வீட்டின் வெளியே விளையாடியபோது ஏரி கால்வாயில் தவறி விழுந்து 3 வயது சிறுவன் பரிதாப பலி appeared first on Dinakaran.

Tags : Tiruvallur ,Senthil Kumar ,Venkathur RRK ,Mangai ,Jeevita ,Mithran ,Senthilkumar ,
× RELATED திண்டுக்கல் மாவட்டம்...