- மதிமுக
- திருவள்ளூர்
- பொது உறுப்பினர்கள்
- திருவள்ளூர் மாவட்டம்
- திமுக
- நேமிலிச்சேரி
- மாவட்ட கவுன்சில்
- ஜனாதிபதி
- அட்கோ மணி
- பி.டி.மணி
- தின மலர்
திருவள்ளூர்: திருவள்ளுர் மாவட்டத்தில் மதிமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. திருவள்ளுர் மாவட்ட மறுமலர்ச்சி திமுகவின் பொது உறுப்பினர்கள் கூட்டம் நெமிலிச்சேரியில் நடந்தது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட அவைத் தலைவர் அட்கோமணி தலைமை தாங்கினார். தலைமை செயற்குழு உறுப்பினர் பி.டி.மணி, மாவட்ட பொருளாளர் பி.வி.தனஞ்செழியன், மாவட்ட துணை செயலாளர்கள் கி.விஜயராகவன், டி.ரவிக்குமார், சுஜாதா ஹேமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த கூட்டத்தில் மாவட்ட செயலாளர் நெமிலிச்சேரி மு.பாபு ஆலோசனைகளை வழங்கிப் பேசினார். அப்போது அவர், கட்சியின் வளர்ச்சிப் பணிகள் குறித்தும், தமிழர் திருநாளாம் தை பொங்கல் விழாவை முன்னிட்டு அனைத்து ஒன்றிய, நகரங்களில் மறுமலர்ச்சி திமுகவின் கொடியேற்றி ஏழை, எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி திருநாளை கொண்டாட வேண்டும் என்று ஆலோசனைகளை வழங்கினார். பொதுக்குழு உறுப்பினர்கள். அனைத்து ஒன்றிய செயலாளர்கள், நகர செயலாளர்கள், இளைஞர் அணி, மாணவர் அணி, மகளீர் அணிகளின் அமைப்பாளர்கள், ஒன்றிய, நகர நிர்வாகிகள், கிளை செயலாளர்கள் கலந்துக் கொண்டனர்.
The post மதிமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் appeared first on Dinakaran.