திருவள்ளூர்: பெண்களுக்கு எதிரான கொடுமைகளை கட்டுப்படுத்தக் கோரி அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட மாஜி அமைச்சர் பி.வி.ரமணா, பெஞ்சமின் உட்பட 500க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
பெண்களுக்கு எதிரான கொடுகமைகளை கட்டுப்படுத்தக் கோரி திருவள்ளூரில் மாவட்ட அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் காவல் துறை சார்பில் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டது.
இருப்பினும் திருவள்ளூரில் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பி.வி.ரமணா தலைமையில் முன்னாள் எம்பி பி.வேணுகோபால், திருத்தணி கோ.அரி, மாவட்ட நிர்வாகிகள் இன்பநாதன், கமாண்டோ அ.பாஸ்கரன், விஜயலட்சுமி ராமமூர்த்தி, பாண்டுரங்கன், ஆர்.டி.இ.சந்திரசேகர், ஒன்றிய, நகர, செயலாளர்கள் ராமஞ்சேரி எஸ்.மாதவன், இ.என்.கண்டிகை ஏ.ரவி, டி.டி.சீனிவாசன், சூரகாபுரம் சுதாகர், டி.சௌந்தரராஜன், ஜி.கந்தசாமி, சக்திவேல், கோ.குமார்,
மாவட்ட அணிகளின் நிர்வாகிகள் வி.ஆர்.ராம்குமார், வினோத்குமார் ஜெயின், வேளஞ்சேரி கவிசந்திரன், ஆர்.ராஜி, எஸ்.ஏ.நேசன், எம்.எழிலரசன், பி.வி.பாலாஜி, எஸ்.ஞானகுமார், எம்.ஜோதி, என்.ராதாகிருஷ்ணன், சீனு, சதீஷ், பி.என்.உதயகுமார், பி.சௌந்தர்ராஜன், பி.சுந்தரேசன், எல்.செந்தில்குமார், டி.விஜய் பாபு, சந்திரசேகர், புங்கத்தூர் டி.தேவா, போளிவாக்கம் மணி, வலசை ஜெயராமன், சத்தியமூர்த்தி, விஜயகாந்த், வி.ஆர்.குமரேசன், ஜெகநாதன் உட்பட 1000ற்கும் மேற்பட்டோர் குவிந்து ஆர்பாட்டத்தில் ஈடுபட முயன்றனர்.
அப்போது 100க்கும் மேற்பட்ட போலீசார் ஆர்பாட்டத்தில் ஈடுபட முயன்றவர்களை கைது செய்யும் முயற்ச்சியில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது. அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பியதால் போலீசார் முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா உள்பட 300க்கும் மேற்பட்டோரை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர். இதனைத் தொடர்ந்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து மாலை 6.30 மணியளவில் விடுதலை செய்யப்பட்டனர்.
பூந்தமல்லி: திருவள்ளூர் மத்திய மாவட்ட அ.தி.மு.க.சார்பில் சென்னை போரூர் அடுத்த காரம்பாக்கம் பகுதியில் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பெஞ்சமின் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் அதிமுகவை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உள்பட 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இந்த ஆர்ப்பாட்டத்தையொட்டி கோயம்பேடு காவல் துணை ஆணையர் சுப்புலட்சுமி மற்றும் வளசரவாக்கம் காவல் உதவி ஆணையர் செம்பேடு பாபு தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.
கண்டன ஆர்ப்பாட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் திடீரென மேடையின் மீது ஏறிய போலீசார் கோஷம் போட்டு கொண்டிருந்த அதிமுகவினரை குண்டு கட்டாக கைது செய்தனர். இதனால் அதிமுகவினர் போலீசாரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினரை போலீசார் கைது செய்து பேருந்துகளில் ஏற்றிச் சென்று அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. ரா.மணிமாறன், மாநில இலக்கிய அணி துணைச் செயலாளர் இ.சி.சேகர், பூந்தமல்லி நகர செயலாளர் கே.எஸ்.ரவிசந்திரன், ஒன்றியச் செயலாளர்கள் ராஜா என்கிற பேரழகன், கே.ஜி.டி.கவுதமன், மற்றும் நிர்வாகிகள் பிரேம் குமார், சல்மான் ஜாவித், எஸ்.கோபிநாத், அந்தமான் முருகன், காரம்பாக்கம் மகேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
The post பாலியல் வன்கொடுமைகளை கட்டுப்படுத்தக் கோரி அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்: மாஜி அமைச்சர்கள் உட்பட 500 பேர் கைது appeared first on Dinakaran.