மில்க்மெயிட் 1டின்
பொடித்த சர்க்கரை – 75 கிராம்
வெண்ணெய் – 125 கிராம்
மைதா – 125 கிராம்
பேக்கிங் பவுடர் – 2 தேக்கரண்டி
பேக்கிங் சோடா – 1 தேக்கரண்டி
சூடான பால் – 2 கப்
வெணிலா எசென்ஸ் 2 தேக்கரண்டி
சுகர் சிரப் செய்ய:
சர்க்கரை அரை அரை கப்
தண்ணீர் – கால் கப்
ரோஸ் எசென்ஸ் – 1 துளி
ஜாம் சாஸ் செய்ய:
மிக்ஸட் ப்ரூட் ஜாம் – 75 கிராம்
வெதுவெதுப்பான நீர் 3 தேக்கரண்டி.
செய்முறை:
பட்டருடன் பொடித்த சர்க்கரை சேர்த்து நன்கு பீட் செய்யவும். பின் மில்க்மெயினட் சேர்த்து நன்கு பீட் செய்யவும். வெண்ணெய் சர்க்கரை மில்க்மெயிட் மூன்றையும் சேர்ந்த கலவையை க்ரீமியான பதத்திற்கு வரும் வரை 10 நிமிடங்கள் வரை நன்கு பீட் செய்யவும். பின் மைதா உடன் பேக்கிங் பவுடர் மற்றும் பேக்கிங் சோடா சேர்த்து சலித்துக் கொள்ளவும் பின் மைதா கலவை சிறிது சிறிதாகத் தூவி நன்கு கலந்து கொள்ளவும் இடையிடையே சூடான பால் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். பின் வெண்ணெய் தடவி பட்டர் பேப்பர் போட்டு ரெடியா உள்ள ட்ரேயில் மாவை ஊற்றவும் பின் நன்கு எல்லா சைடும் தட்டிக் கொள்ளவும். பின் 180 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் 15 நிமிடங்கள் வரை சூடான ஓவனில் வைத்து 35_40 நிமிடங்கள் வரை பேக் செய்யவும். பின் பத்து நிமிடம் கழித்து ட்ரேயில் இருந்து கவிழ்த்து அரைமணிநேரம் வரை ஆறவிடவும். பின் கேக் முழுவதும் குச்சியால் துளை போடவும். சர்க்கரை உடன் தண்ணீர் சேர்த்து சர்க்கரை கரையும் வரை கொதிக்க விடவும். பின் இறக்கி ரோஸ் எசென்ஸ் கலந்து ஆறவிட்டால் சுகர் சிரப் ரெடி. பின் சிறிது சிறிதாக கேக் மேல் ஊற்றவும். ஜாம் உடன் வெதுவெதுப்பான நீர் சேர்த்து ஒரு கொதி விடவும் ஜாம் கரையும் வரை கொதிக்க வைத்து இறக்கி இளம் சூட்டில் கேக் மேல் ஊற்றவும். பின் ஒரு மணி நேரம் வரை செட் ஆக விடவும். சுவையான ஆரோக்கியமான ஹனி கேக் ரெடி.