கஸ்டர்ட் டீ கேக்

தேவையானவை

மைதா கால் கப்
வெணிலா கஸ்டர்டு பவுடர் முக்கால் கப்
சுகர் பவுடர் முக்கால் கப்
பேக்கிங் பவுடர் 1 தேக்கரண்டி
பேக்கிங் சோடா கால் தேக்கரண்டி
மெல்டேட் பட்டர் அரை கப்
வெணிலா எசன்ஸ்
1 தேக்கரண்டி
வினிகர் 1 தேக்கரண்டி
பால் அரை கப்.

செய்முறை:

மைதா, கஸ்டர்ட் பவுடர், பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா எல்லாம் சலித்து வைத்துக் கொள்ளவும். மிதமான சூட்டில் உள்ள பாலில் வினிகர் கலந்து பத்து நிமிடம் வைத்து பட்டர் மில்க் தயார் செய்து வைத்துக் கொள்ளவும். ஒரு பௌலில் உருக்கிய வெண்ணெய், சர்க்கரை, வெண்ணிலா எசன்ஸ் சேர்த்து நன்கு பீட் செய்து வைத்துக்கொள்ளவும். அத்துடன் மைதா மாவு கலவையை சேர்த்து நன்றாக கலந்து, பின்னர் தயார் செய்து வைத்த கேக் மோல்டில் சேர்த்து மைக்ரோ வேவ் ஓவனில் 180 டிகிரியில் பிரீ ஹீட் செய்து 35 நிமிடங்கள் பேக் செய்து எடுத்தால் சுவையான கஸ்டர்டு டீ கேக் தயார்.

The post கஸ்டர்ட் டீ கேக் appeared first on Dinakaran.