தேவையானவை:
பால் – 3 கப்,
சர்க்கரை – 1 கப்,
நெய் – 2 தேக்கரண்டி.
செய்முறை:
ஒரு அகலமான பாத்திரத்தில் பாலையும், சர்க்கரையையும் ஒன்றாகப் போட்டு அடுப்பில் வைக்கவும். சர்க்கரை கரைந்து பால் கொதித்து வரும். பால் பொங்கிவிடாதபடி ஒரு கரண்டியால் கிளறிவிட வேண்டும். பால் கெட்டியாக வரும் வரைக் கிளறி விட்டுக் கொண்டு இருக்கவும். ஒரு தட்டில் நெய்யை ஊற்றி பரவலாக தடவி வைக்கவும். அடுப்பில் உள்ள பால் இறுகி அல்வா பதத்தில் வந்ததும் இறக்கி நெய் தடவிய தட்டில் கொட்டி சமமாகப் பரப்பி ஆறிய பின் கேக்குகளாக வெட்டவும். ‘கோவா கேக்’ சாப்பிடச் சுவையாக இருக்கும். தயாரிப்பதும் எளிது.