கடுகுக் கீரை தக்காளி தொக்கு

தேவையானவை:

நாட்டுத் தக்காளி – 5,
கடுகு – 1 டீஸ்பூன்,
மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்,
மஞ்சள் தூள் – ½ டீஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு,
பெருங்காயத் தூள் – ¼ டீஸ்பூன்,
எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்.

செய்முறை:

கடுகைக் கழுவி, கல் நீக்கி விட்டு 6 மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு நீரை வடித்து விட்டு ஒரு சுத்தமான துணியில் கட்டி முடிந்து விடவும். இரு நாட்களில் நன்கு முளைத்து சிறிய கீரை வெளியே வரும். இதுதான் கடுகுக் கீரை. அதன்பிறகு தக்காளியை பொடியாக நறுக்கவும். எண்ணெயை காயவைத்து, தக்காளியைப் போட்டு நன்கு வதக்கவும். தக்காளி பச்சைவாசனை போக வதங்கியதும் உப்பு, மிளகாய்த் தூள், மஞ்சள், பெருங்காயம் சேர்த்து நன்கு வதக்கிய பிறகு முளைத்திருக்கும் கடுகுக் கீரையையும் போட்டுக் கிளறவும். சேர்ந்தாற்போல் வந்ததும் இறக்கவும். மிகவும் சுவையாக இருக்கும். இந்த தொக்கு வித்தியாசமான சைட் டிஷ். சாதத்தில் பிசைந்து சாப்பிட ஏற்றது. இட்லி, தோசை, ப்ரெட், சப்பாத்தி என எல்லாவற்றுக்கும் ஈடு கொடுக்கும் தொக்கு.

The post கடுகுக் கீரை தக்காளி தொக்கு appeared first on Dinakaran.