தேவையானவை:
கடலை மாவு – 200 கிராம்,
உருளைக்கிழங்கு – 2,
வெங்காயம் – 2,
தக்காளி – 1,
கொத்தமல்லி, கறிவேப்பிலை – தேவைக்கு.
மசாலாப் பொருட்கள் – தேவைக்கு ஏற்ப பட்டை,
லவங்கம்,
பிரிஞ்சி இலை,
ஏலக்காய்,
அன்னாசி ெமாக்கு,
மஞ்சள் தூள்,
பெருங்காயம்.
அரைக்க:
தேங்காய் துருவல்,
பொட்டுக்கடலை,
கசகசா,
பச்சை மிளகாய்.
செய்முறை:
கடலை மாவை கரைத்துக் கொள்ளவும். மசாலாப் பொருட்கள் தாளித்து வெங்காயம், தக்காளி பொடியாக அரிந்து தாளித்து, தேங்காய், பொட்டுக்கடலை, கசகசா, பச்சை மிளகாய் மிக்ஸியில் அரைத்து இதை போட்டு கொதிக்க விடவும். ெவந்த உருளைக்கிழங்கை தோல் உரித்து உதிர்த்து கடப்பாவில் போட்டு, பிறகு கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை போட்டு இறக்கவும்.