நேற்று முன் தினம் மதுரை ரயில்வே கோட்ட மேலாளர் சரத்ஸ்ரீ வத்சவா, பாம்பன் புதிய ரயில் பாலத்தை ஆய்வு செய்தார். இந்த நிலையில் புதிய பாலத்தில் இன்றும் ரயில்வே அதிகாரிகள் ஆய்வு செய்தனர். கப்பல் செல்வதற்காக தூக்கு பாலத்தை மேலே எழுப்பி அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது தெற்கு ரயில்வே அதிகாரி சீனிவாசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது; பாம்பன் கடலில் அமைக்கப்பட்டுள்ள புதிய ரயில் பாலம் 100 சதவீதம் தயாராக உள்ளது. பழைய பாலத்தைப் போலவே புதிய ரயில் பாலமும் 100 ஆண்டை கடந்தும் நிற்கும். பாலத்தில் 75 கிலோமீட்டர் வேகத்தில் ரயில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்றார்.
The post பாம்பன் புதிய ரயில் பாலம் 100 சதவீதம் தயார்: பழைய பாலத்தைப் போலவே புதிய ரயில் பாலமும் 100 ஆண்டை கடந்தும் நிற்கும்: தெற்கு ரயில்வே அதிகாரி தகவல் appeared first on Dinakaran.