கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்கள் விலை குறைந்தது

சென்னை: கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, கடந்த 2 நாட்களுக்கு முன், கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்களின் விலை அதிகரித்து காணப்பட்டது. இந்நிலையில், விசேஷ நாட்கள் மற்றும் முகூர்த்த நாட்கள் இல்லாததால் நேற்று அனைத்து பூக்களின் விலையும் சற்று குறைந்தது.

அதன்படி, ஒரு கிலோ மல்லி ரூ.2,700ல் இருந்து ரூ.1,800க்கும், ஐஸ் மல்லி ரூ.2,500ல் இருந்து ரூ.1,500க்கும், முல்லை ரூ.900க்கும், ஜாதி மல்லி ரூ.700ல் இருந்து ரூ.600க்கும், கனகாம்பரம் ரூ.1000ல் இருந்து ரூ.800க்கும், சாமந்தி ரூ.100ல் இருந்து ரூ.80க்கும், சம்பங்கி ரூ.100க்கும், அரளி ரூ.400ல் இருந்து ரூ.200க்கும், பன்னீர் ரோஸ் ரூ.120ல் இருந்து ரூ.100க்கும், சாக்லேட் ரோஸ் ரூ.180ல் இருந்து ரூ.120க்கும் விற்பனை செய்யப்பட்டது.

The post கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்கள் விலை குறைந்தது appeared first on Dinakaran.

Related Stories: