தொடக்க கல்வி ஆசிரியர் பட்டய தேர்வு எழுதியவர்களுக்கு டிச.30ம் தேதி முதல் சான்றிதழ்கள் விநியோகம்: அரசு தேர்வுகள் இயக்ககம் தகவல்

சென்னை: தொடக்க கல்வி ஆசிரியர் பட்டய தேர்வு எழுதியவர்களுக்கு வரும் 30ம் தேதி முதல் சான்றிதழ்கள் விநியோகம் செய்யப்படும் என அரசு தேர்வுகள் இயக்ககம் தகவல் தெரிவித்துள்ளது. 2024 ஜூன்/ஜூலை-ல் நடைபெற்ற முதலாண்டு மற்றும் 2ம் ஆண்டு தொடக்க கல்வி ஆசிரியர் பட்டய தேர்வை எழுதிய பயிற்சி மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்களுக்கு மதிப்பெண் மற்றும் பட்டய சான்றிதழ்கள் வரும் 30ம் தேதி முதல் விநியோகம் செய்யப்படும். எனவே, பயிற்சி மாணவர்கள் தாங்கள் பயின்ற நிறுவனத்திலும், தனித்தேர்வர்கள் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்திலும் மதிப்பெண் சான்றிதழை பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

The post தொடக்க கல்வி ஆசிரியர் பட்டய தேர்வு எழுதியவர்களுக்கு டிச.30ம் தேதி முதல் சான்றிதழ்கள் விநியோகம்: அரசு தேர்வுகள் இயக்ககம் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: