* பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல நீர்வளத்துறை அறிவுறுத்தல்
சென்னை: பூண்டி நீர்த்தேக்கத்திலிருந்து விநாடிக்கு 1000 கனஅடி நீர் திறக்கப்படுவதால் கொசஸ்தலையாறு கரையோர மக்களுக்கு வெள்ளஅபாய எச்சரிக்கை விடுப்பட்டுள்ளது. சென்னையின் குடிநீர் வழங்கும் முக்கிய நீர் ஆதாரங்களில் ஒன்றான பூண்டி நீர்த்தேக்கம் 34.58 சதுர கீலோ மீட்டர் பரப்பளவில் திருவள்ளூர் மாட்டத்தில் அமைந்துள்ளது. நீர்த்தேக்கத்தின் நீர் மட்ட மொத்த உயரம் 35 அடியாகும். இதன் முழு கொள்ளவு 32.31 மில்லியன் கன அடியாகும். 31.21 மில்லியன் கன அடியாகவும் மற்றும் பூண்டியின் நீர் வரத்து 1290 கன அடியாக உள்ளது. தற்போது அணையின் நீர் பிடிப்பு பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதாலும், மேலும் நேற்று இரவு ஆந்திர மாநிலம் கிருஷ்ணாபுரம் அணையில் இருந்து 1000 கனஅடி நீர் திறக்கப்பட்டதாலும் பூண்டி நீர்த்தேக்கத்தின் நீர் மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.
நீர்வரத்து அணையின் முழு கொள்ளளவான 35 அடியை தொட்டுவிடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. அணையின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீர்த்தேக்கத்திற்கு வரும் உபரி நீரினை அணையின் பாதுகாப்பு கருதி காலை 9 மணி முதல் வினாடிக்கு 1000 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. எனவே நீர்த்தேக்கத்திலிருந்து மிகை நீர் வெளியேறும் கொசஸ்தலையாறு செல்லும் கிராமங்களான நம்பாக்கம், கிருஷ்ணாபுரம், ஆட்ரம்பாக்கம், ஒதப்பை, நெய்வேலி, எறையூர், மணலி, மணலி புதுநகர், சடையான்குப்பம், எண்ணூர் உள்ளிட்ட கொசஸ்தலையாற்றின் இருபுறமும் உள்ள தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்படுகிறது. மேலும் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு நீர்வளத்துறை அறிவுறுத்தியுள்ளது.
The post பூண்டி நீர்த்தேக்கத்திலிருந்து 1000 கனஅடி நீர் திறப்பு: கொசஸ்தலையாறு கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை appeared first on Dinakaran.