இதையறிந்த வனத்துறையினர், யானைகளை தேன்கனிக்கோட்டை வனப்பகுதிக்கு விரட்டினர். அந்த யானைகள் கெலமங்கலம் அருகே பிதிரெட்டி ஏரியில் தஞ்சமடைந்தன. யானைகளை பார்க்க பொதுமக்கள் கூட்டம் கூடியதால், அங்கே முகாமிட்டிருந்த யானைகளை கண்காணித்து வந்த வனத்துறையினர், நேற்று முன்தினம் இரவு பட்டாசு வெடித்து விரட்டும் பணி மேற்கொண்டனர். அந்த யானைகள் இடம் பெயரும் போது, கிரிசெட்டிபள்ளி, பச்சப்பனட்டி, கோட்டட்டி ஆகிய கிராமங்களில் ராகி, முட்டைகோஸ், தக்காளி, பீன்ஸ் உள்ளிட்ட பயிர்களை நாசம் செய்தன. தொடர்ந்து வனத்துறையினர் யானைகளை அங்கிருந்து பேவநத்தம் வனப்பகுதிக்கு விரட்டியடித்தனர். தற்போது நொகனூர் வனப்பகுதி வழியாக, ஜவளகிரி வனப்பகுதிக்கு அந்த யானைகளை விரட்ட, வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.
The post கெலமங்கலம் அருகே ஏரியில் முகாமிட்டிருந்த 6 யானைகள் விரட்டியடிப்பு appeared first on Dinakaran.