எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் தொழில் முனைவோர் கருத்தரங்கம்

திருவள்ளூர்: பூந்தமல்லி – ஆவடி நெடுஞ்சாலையில், திருவேற்காட்டில் அமைந்துள்ள எஸ்ஏ பொறியியல் கல்லூரி, சிஎஸ்சி, ஐடி, எம்சிஏ, எம்பிஏ துறைகளின் சார்பில் \”தொழில்முனைவோரை உருவாக்குவது வாய்ப்புகளை வெற்றிகரமாக மாற்றுவது\” குறித்த 2 நாட்கள் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் கல்லூரி தாளாளர் எஸ்.அமர்நாத் தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் எஸ்.ராமச்சந்திரன், சிஎஸ்இ துறைத் தலைவர் ஆர்.கீதா, தகவல் தொழில்நுட்பத்துறைத் தலைவர் சேர்மகனி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

எம்சிஏ துறைத் தலைவர் வி.சுஜாதா வரவேற்றார். இந்த கருத்தரங்கில் தேசிய சிறுதொழில் கழக தலைமை பொது மேலாளர் ராஜேஷ்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். இதில் தேசிய சிறுதொழில் கழகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டு கோப்புகளை பரிமாறிக் கொண்டனர். இதனைத் தொடர்ந்து, என்எஸ்ஐசியின் துணைப் பொது மேலாளர் சாந்தி, மா டெல்ட் இன்னோவேஷன் சிஇஓ கார்த்திகேயன், சாய் கிங்ஸின் சிஇஓ பாலாஜி சடகோபன் ஆகியோர் மாணவர்களை தொழில் முனைவோராக உருவாக ஊக்கப்படுத்தினர்.

மாவட்ட தொழில் மைய உதவி மேலாளர் எழில்செல்வன், வெபிலெஸ்க் இன்போடெக் நிறுவனர் தன பிரபு சேகர், டெவேட்டல் இணை நிறுவனர் என்.பிரகாஷ் ஆகியோர் முக்கிய நுண்ணறிவு மற்றும் நடைமுறை அறிவை வழங்குவதன் மூலம் வெற்றிகரமான தொழில்முனைவோராக மாறுவது மற்றும் வணிக வெற்றியை அடைவது குறித்து பேசினர். முடிவில் எம்பிஏ துறைத் தலைவர் வி.ரோகிணி நன்றி கூறினார்.

The post எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் தொழில் முனைவோர் கருத்தரங்கம் appeared first on Dinakaran.

Related Stories: