லோடுமேனாக வேலை பார்த்தபடி ஹெராயின் சப்ளை செய்த அசாம் வாலிபர் சிக்கினார்

சென்னை: சென்னையில் லோடுமேனாக வேலை பார்த்தபடி ஹெராயின் விற்பனை செய்து வந்த அசாம் வாலிபரை போலீசார் கைது செய்தனர். சென்னையில் கல்லூரி மாணவர்களை குறிவைத்து ஹெராயின் போதைப்பொருள் விற்பனை செய்யப்படுவதாக சாஸ்திரி நகர் தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதுகுறித்து தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். அதில், சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள டைல்ஸ் கடை ஒன்றில் லோடு மேனாக பணியாற்றி வரும் அசாம் மாநிலத்தை சேர்ந்த துபைல் இஸ்லாம் (29) என்பவர், மியான்மார் நாட்டில் இருந்து கடத்தி வரப்பட்ட ஹெராயினை சென்னையில் வாட்ஸ்அப் குழு மூலம் பலருக்கு விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

அதைதொடர்ந்து தனிப்படை போலீசார் நேற்று முன்தினம் வாடிக்கையாளர் போல் துபைல் இஸ்லாமிடம் போதைப்பொருள் வாங்குவது போல், அவரை வரவழைத்து கைது செய்தனர். அவரிடம் இருந்து 10 கிராம் ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது. இதில் மேலும் பலருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளதால், அவர்களையும் கைது செய்ய தனிப்படை போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

The post லோடுமேனாக வேலை பார்த்தபடி ஹெராயின் சப்ளை செய்த அசாம் வாலிபர் சிக்கினார் appeared first on Dinakaran.

Related Stories: