700 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

தண்டையார்பேட்டை: ரேஷன் பொருட்கள் கடத்தி விற்கப்படுவதை தடுக்கும் பணியில் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் கொருக்குப்பேட்டை ரயில்வே போலீசார் ரயில்நிலைய நடைமேடையில் ரோந்து சென்றபோது கேட்பாரற்று 700 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகள் கிடந்தது.

அதை பறிமுதல் செய்தனர். முதற்கட்ட விசாரணையில், இந்த அரிசி மூட்டைகள் ஆந்திர மாநிலத்திற்கு கடத்த முயன்றது தெரியவந்தது. இதுகுறித்து ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து, கடத்தல் ஆசாமிகளை தேடி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட அரிசி மூட்டைகள் நுகர்பொருள் வாணிப கிடக்கில் ஒப்படைக்கப்பட்டது.

The post 700 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் appeared first on Dinakaran.

Related Stories: