சிரியாவில் ஆசாத் போர் குற்றங்களின் விசாரணை தொடக்கம்

வாஷிங்டன்: சிரியாவில் உள்நாட்டு போரில் நடந்த போர்க்குற்றங்கள், பொதுமக்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் இனப்படுகொலைகள் உள்ளிட்டவை குறித்து விசாரணை நடத்துவதற்காகவும், வழக்கு தொடர உதவுவதற்காகவும் கடந்த 2016ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் மூலமாக சிரியாவுக்கான சர்வதேச, பாரபட்சமற்ற மற்றும் சுதந்திர அமைப்பானது உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பின் தலைவரான ராபர்ட் பெடிட் சிரியாவுக்கு பயணம் மேற்கொண்டார். இந்த பயணம் முடிந்த நிலையில் பேசிய அவர், போர் குற்றங்கள் குறித்த பதிவுகள் அழிக்கப்படுவதற்கு முன், மற்ற ஆதாரங்களை சேமிக்க வேண்டியது அவசியமாகும்.

ஆசாத் ஆட்சியின் வீழ்ச்சியானது நமது ஆணையை நிறைவேற்றுவதற்கான ஒரு குறிப்பிடத்தக்க வாய்ப்பாகும். அதிபர் ஆசாத் ஆட்சியில் இருந்தபோது நடந்த அட்டூழியங்கள், கொலைகளுக்கு காரணமானவர்கள் மீது வழக்கு தொடர வேண்டும் என்று சிரியா மக்களிடம் இருந்து கோரிக்கைகள் அதிகரித்து வருகின்றன. சிரியாவின் புதிய அதிகாரிகள் நாட்டில் நடந்த மிக கடுமையான குற்றங்களை விசாரிப்பதில் ஒத்துழைப்பு தருவதற்கு ஒப்புக்கொண்டுள்ளனர். அதற்காக அவர்கள் தயாராகி வருகிறார்கள்” என்றார்.

The post சிரியாவில் ஆசாத் போர் குற்றங்களின் விசாரணை தொடக்கம் appeared first on Dinakaran.

Related Stories: