விலைவாசி கடும் உயர்வு; தூங்கும் ஒன்றிய அரசு: ராகுல் குற்றச்சாட்டு


டெல்லி: விலைவாசி உயர்வால் மக்கள் அன்றாடம் போராடி வருவதாகவும், ஆனால் கும்பகர்ணன் போல் ஒன்றிய அரசு தூங்குவதாகவும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் கடுமையாக விமர்ச்சித்துள்ளார். காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி வெளியிட்ட பதிவில், ‘சமீபத்தில் கிரி நகரில் உள்ள காய்கறி சந்தைக்குச் சென்றபோது, உணவுப் பொருள்களின் விலையேற்றத்தால் தங்களுக்கு ஏற்பட்ட இன்னல்களை விவரிக்கும் பெண்களுடன் உரையாடினேன்.

அவர்களுடன் உரையாடும்போது, சாமானியர்களின் நிதிநிலை எவ்வாறு மோசமடைந்து வருகிறது? பணவீக்கம் எவ்வாறு அனைவரையும் பாதிக்கிறது? என்பதை விற்பனையாளர்களிடம் அறிந்து கொண்டேன். விலைவாசி உயர்வால் மக்கள் அன்றாடம் போராடி வருகின்றனர். ஆனால் ஒன்றிய அரசு கும்பகர்ணன் போல் ஒன்றிய அரசு தூங்குகிறது’ என்று குறிப்பிட்டுள்ளார்.

The post விலைவாசி கடும் உயர்வு; தூங்கும் ஒன்றிய அரசு: ராகுல் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Related Stories: