ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் பகுதியில் பள்ளத்தில் ராணுவ வாகனம் கவிழ்ந்து 5 வீரர்கள் உயிரிழப்பு

ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் பகுதியில் பள்ளத்தில் ராணுவ வாகனம் கவிழ்ந்து 5 வீரர்கள் உயிரிழந்தனர். பூஞ்ச் பகுதியில் சுமார் 150 அடி பள்ளத்தில் ராணுவ வாகனம் கவிழ்ந்தது. 18 ராணுவ வீரர்களை ஏற்றிச்சென்ற வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இன்று மாலை 5.40 மணியளவில் நீலம் தலைமையகத்தில் இருந்து பால்னோய் கோரா போஸ்ட் நோக்கிச் சென்று கொண்டிருந்த 11 மராத்தா லைட் காலாட்படையின் ராணுவ வாகனம் கோரா போஸ்ட் அருகே விபத்துக்குள்ளானது.

வாகனம் சுமார் 150 அடி ஆழமான பள்ளத்தாக்கில் விழுந்ததாகவும், வாகனத்தில் 18 வீரர்கள் இருந்ததாகவும், அதில் 5 பேர் உயிரிழந்ததாகவும், மீதமுள்ளவர்கள் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. காயமடைந்தவர்களில் சிலரது நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாகவும், அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

தற்போது மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது, நிவாரண மற்றும் மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்து காயமடைந்தவர்களை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் மான்கோட் காவல் நிலையம் மற்றும் மெந்தார் காவல் நிலையத்தின் கீழ் வரும் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுக்கு அருகில் நடந்துள்ளது.

The post ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் பகுதியில் பள்ளத்தில் ராணுவ வாகனம் கவிழ்ந்து 5 வீரர்கள் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Related Stories: