எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த பதவி நீக்க நோட்டீஸ் வெறும் துருபிடித்த கத்தி: துணை ஜனாதிபதி கருத்து

புதுடெல்லி: நடந்து முடிந்த நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில், மாநிலங்களவை தலைவரும், துணை ஜனாதிபதியுமான ஜெகதீப் தன்கருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் பதவி நீக்க தீர்மான நோட்டீசை கொண்டு வந்தன. தன்கர் பாரபட்சமாக நடந்து கொள்வதாகவும், அவை செயல்பட மிகப்பெரிய இடையூறாக இருப்பதாகவும் எதிர்க்கட்சி எம்பிக்கள் குற்றம்சாட்டினர். ஆனால் இந்த நோட்டீஸ் அவையின் துணைத்தலைவர் ஹரிவன்சால் நிராகரிக்கப்பட்டது. இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக முதல் முறையாக துணை ஜனாதிபதி தன்கர் நேற்று கருத்து தெரிவித்தார்.

பெண் பத்திரிகையாளர்கள் மத்தியில் அவர் பேசுகையில், ‘‘எனக்கு எதிராக கொண்டு வரப்பட்ட பதவிநீக்க தீர்மான நோட்டீசை நீங்கள் பார்த்திருந்தால் அதிர்ச்சி அடைந்திருப்பீர்கள். முன்னாள் பிரதமர் சந்திரசேகர், ‘‘பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய காய்கறி வெட்டும் கத்தியை பயன்படுத்த கூடாது’’ என்றார். ஆனால் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நோட்டீஸ், காய்கறி வெட்டும் கத்தி கூட கிடையாது. அது துருபிடித்த கத்தி. நல்லவேளை நீங்கள் அந்த நோட்டீசை பார்க்கவில்லை. பார்த்திருந்தால், தூக்கமே வந்திருக்காது’’ என்றார்.

The post எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த பதவி நீக்க நோட்டீஸ் வெறும் துருபிடித்த கத்தி: துணை ஜனாதிபதி கருத்து appeared first on Dinakaran.

Related Stories: